பிரமாண்ட அளவில் தயாரிக்கப்படும் பிரியாணி - வெளியேறும் புகையால் மக்கள் அவதி

கோவையில் பிரியாணி தயாரிப்பு கூடத்தில் இருந்து, வெளிவரும் புகையால் பெரும் அவதி ஏற்படுவதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் புகாரளிக்கப்பட்டு உள்ளது.
x
சின்னம்மாள் வீதியில், சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்கு செயல்படும் தனியாருக்கு சொந்தமான இடத்தில், பிரமாண்ட அளவில் பிரியாணி தயாரிக்கப்படுகிறது. அங்கிருந்து வெளியேறும் புகையால், மூச்சு திணறல், கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாக குற்றம்சாட்டி புகாரளித்துள்ளனர். கொட்டப்படும் கோழிக் கழிவால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளதாக கூறும் புகாரில்,  உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்