பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

வடகிழக்கு பருவமழை பாதிப்பில் இருந்து மீள உடனடியாக நிதி வழங்கிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
x
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், 
வடகிழக்கு பருவமழையினால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீளவும், சேதமடைந்த உள்கட்டமைப்புகளை சரி செய்யவும் உடனடியாக ஒன்றிய அரசின் நிதியை விடுவிக்க கோரி உள்துறை அமைச்சகத்திற்கு அறிவுறுத்துமாறு பிரதமர் மோடியிடம் கேட்டு கொண்டுள்ளார். 

தமிழ்நாட்டில் தற்காலிக சீரமைப்புப் பணிகளுக்காக  ஆயிரத்து 510 புள்ளி 83 கோடி ரூபாயும், சாலைகள், பாலங்கள் மற்றும் பொதுக் கட்டடங்கள் போன்ற சேதமடைந்த உள்கட்டமைப்புகளை நிரந்தரமாக சரிசெய்வதற்காக 4 ஆயிரத்து 719 புள்ளி 62 கோடி ரூபாயும் நிவாரணமாக வழங்கிட கேட்டு கொண்டுள்ளார். 

தமிழக அரசின் சார்பில் ஏற்கனவே கடந்த நவம்பர் 16, 25 மற்றும் டிசம்பர் 15 ஆகிய தேதிகளில், தாம் பிரதமருக்கு கடிதம் எழுதியதை  முதலமைச்சர் ஸ்டாலின் நினைவூட்டியுள்ளார். அப்போதே  சேத விவரங்களுடன் கூடிய விரிவான அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் கடிதத்தில்  குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்