ஆதரவற்ற மூதாட்டிக்கு உதவி - போலீஸ் எஸ்.எஸ்.ஐ.க்கு குவியும் பாராட்டு

காரியாபட்டி அருகே ஆதரவற்ற மூதாட்டிக்கு ஓராண்டுக்கு மேலாக காவல் உதவி ஆய்வாளர் உதவி வருகிறார்.
x
விருதுநகர் மாவட்டம், அயன்ரெட்டியாபட்டி பேருந்து நிறுத்தத்தில் ஆதரவற்று இருந்த மூதாட்டி ஒருவரை, மல்லாங்கிணறு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சஜீவ் மீட்டுள்ளார். 

திருமணம் ஆகாத மூதாட்டிக்கு உடன் பிறந்தவர்கள் இருந்தும் கைவிட்ட நிலையில், மூதாட்டிக்கு உதவி செய்ய உதவி ஆய்வாளர் முடிவெடுத்தார். இதையடுத்து மேற்கூரை இடிந்து சேதமடைந்த கிடைந்த மூதாட்டிக்கு சொந்தமான வீட்டை சரிசெய்து, அவரை பாதுகாப்பாக தங்க வைத்துள்ளார். மேலும், அமைச்சர் தங்கம் தென்னரசு உடன் இணைந்து, மூதாட்டிக்கு உணவுக்காக ஏற்பாட்டையும் செய்துள்ளார். எந்த ரத்த சொந்தமும் இல்லாத மூதாட்டிக்கு, கடந்த ஓராண்டுக்கு மேலாக உணவு மற்றும் மருத்துவ வசதி செய்து வரும் உதவி ஆய்வாளருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்