"கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும்" - தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்

ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில், கட்டுப்பாடுகளையும், கண்டிப்புகளையும் தமிழக அரசு கடுமையாக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி துணை தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் கேட்டு கொண்டுள்ளார்.
x
ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில், கட்டுப்பாடுகளையும், கண்டிப்புகளையும் தமிழக அரசு கடுமையாக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி துணை தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் கேட்டு கொண்டுள்ளார். பெரும்பாலான இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியாமல் நடமாடுவதை சுட்டி காட்டியுள்ள அவர், வரும் முன் காக்கும் வகையில், முகக்கவசம் அணிவதை நூறு சதவீதம் செயல்படுத்த அரசு தீவிரம் காட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், சமூக இடைவெளி மற்றும் ஆங்காங்கே மக்கள் கூடுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்