ஸ்டெர்லைட் ஆலை உச்சநீதிமன்றத்தில் புதிய மனு

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் மேல்முறையீடு மனுவை விரைந்து விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் புதிய மனு தாக்கல் செய்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை உச்சநீதிமன்றத்தில் புதிய மனு
x
ஸ்டெர்லைட் ஆலை உச்சநீதிமன்றத்தில் புதிய மனு

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில்  மேல்முறையீடு மனுவை விரைந்து விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் புதிய மனு தாக்கல் செய்துள்ளது.அந்த நிறுவனத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில்,தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக, ஆலையில் உள்ள பிரதான இயந்திரங்கள் அமைந்துள்ள பகுதிகளில் மழை நீர் தேங்கி கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என கூறப்பட்டுள்ளது.இயந்திரங்கள், கட்டுமான அமைப்புகள் துருபிடித்து அவை இடிந்து விழும் நிலை உருவாகியுள்ளது என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக உள்ளூர் அளவில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு குழு ஆலையை அவ்வப்போது பார்வையிட்டு வருகிறது.ஸ்டெர்லைட் ஆலையில் தாற்காலிகமாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்க கோரி அளிக்கப்பட்ட 19 கோரிக்கை மனுக்கள் மீது, தமிழக அரசு எவ்வித பதிலையும் இதுவரை அளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஸ்டெர்லைட் ஆலை நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் சீல் வைக்கப்பட்டுள்ளதால் ஆசிட் லீக்கேஜ் ஏற்பட்டுள்ளது என்றும்,அதை சரி செய்யாவிட்டால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்றும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மனுவில் கூறியுள்ளது.ஸ்டெர்லைட் வழக்கு தொடர்புடைய வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீடு மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்