வயலில் மாடு மேய்ந்ததால் பிரச்சினை; இருதரப்பு மோதல் - 8 பேர் படுகாயம்

தஞ்சை மாவட்டம் வெண்டையம்பட்டி கிராமத்தில் ஏற்பட்ட இருதரப்பு மோதலில் 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
வயலில் மாடு மேய்ந்ததால் பிரச்சினை; இருதரப்பு மோதல் - 8 பேர் படுகாயம்
x
தஞ்சை மாவட்டம் வெண்டையம்பட்டி கிராமத்தில் ஏற்பட்ட இருதரப்பு மோதலில் 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். வெண்டையம்பட்டி ஊராட்சி மன்ற தலைவியின், கணவரான சிவகுமார் என்பவருக்கு சொந்தமான வயலில், மணிகண்டன் என்பவரின் மாடு மேய்ந்துள்ளது. இதனால், மோதல் ஏற்பட்டு  இருதரப்பினரும் சமாதானமாக சென்றுள்ளனர். இந்நிலையில், சிவகுமார் தரப்பினர், மணிகண்டனின் வீட்டை சூறையாடி, தாக்குதல் நடத்தியதில், மணிகண்டன் மற்றும் அவரது உறவினர்கள் என 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்