குழந்தைகளுக்கான மாநில கொள்கை வெளியீடு

குழந்தைகள் பாதுகாப்புடன் வாழவும், உரிமையை பெறவும், குழந்தைகளுக்கான மாநில கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
குழந்தைகளுக்கான மாநில கொள்கை வெளியீடு
x
குழந்தைகளுக்கான மாநில கொள்கை வெளியீடு

குழந்தைகள் பாதுகாப்புடன் வாழவும், உரிமையை பெறவும், குழந்தைகளுக்கான மாநில கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.அதில், குழந்தைகளுக்கு பாலின சமத்துவம் கல்வி, மற்றும் தற்காப்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிப்பதோடு,குழந்தைகளுக்கு பிடித்த கற்றல் மற்றும் கற்பித்தல் உருவாக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாண்புடன் கூடிய கண்ணியம் மற்றும் நேர்மறை ஒழுக்கமுடைய கலாச்சாரம் கட்டமைக்கப்படுவதோடு,குழந்தைகளுக்கு  உடல் ரீதியான தண்டனை, மன ரீதியான துன்புறுத்தல்கள் தடை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக அரசியலமைப்பு உரிமைகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும்,குழந்தைகளை பாதுகாப்பதற்கென்றே பிரத்யேகமாக பேரிடர் மற்றும் அவசர நிலை மேலாண்மை அமைப்பு உருவாக்கி செயல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.12 வயது முதல் 18 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளும் உறுப்பினர்களாக இருக்கும் அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் பாலர் சபைகள் உருவாக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்