வயதான தம்பதியர் வசிக்கும் வீடு இடிப்பு - பணம் வாங்கிக் கொண்டு இடித்ததாக புகார்

வயதான தம்பதியர் வசிக்கும் வீடு இடிப்பு - பணம் வாங்கிக் கொண்டு இடித்ததாக புகார்
வயதான தம்பதியர் வசிக்கும் வீடு இடிப்பு - பணம் வாங்கிக் கொண்டு இடித்ததாக புகார்
x
வயதான தம்பதியர் வசிக்கும் வீடு இடிப்பு - பணம் வாங்கிக் கொண்டு இடித்ததாக புகார் 

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே பட்டா நிலத்தில் குடியிருந்த வீட்டை, அரசு அதிகாரிகள் இன்னொருவரிடம் பணம் வாங்கிக்கொண்டு இடித்து இருப்பதாக வயதான தம்பதியர் குற்றம்சாட்டி உள்ளனர். பாளையம் கிராமத்தை சேர்ந்த வயதான தம்பதியர் ராமச்சந்திரன்-கோவிந்தம்மாள். இவர்களுடைய வீட்டின் ஒரு பகுதி புறம்போக்கு நிலத்தில் இருப்பதாக கூறி அதிகாரிகள் அதனை இடித்து உள்ளனர். ஆனால், சரியான முறையில் அளவீடு செய்யாமல், அதிகாரிகள் வீட்டை இடித்துவிட்டதாகவும், அப்பகுதியை சேர்ந்தவரிடம் பணம் வாங்கிக்கொண்டு, இவ்வாறு செய்து உள்ளதாகவும் வயதான தம்பதியர் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்