ஜெய்பீம் திரைப்பட விவகாரம் - நடிகர் சூர்யாவுக்கு வன்னியர் சங்கம் நோட்டீஸ்

ஜெய் பீம் திரைப்படத்தில் நடித்த நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா, இயக்குநர் ஞானவேலு உள்ளிட்டோரிடம் 5 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வன்னியர் சங்க மாநிலத் தலைவர் அருள்மொழி நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
ஜெய்பீம் திரைப்பட விவகாரம் - நடிகர் சூர்யாவுக்கு வன்னியர் சங்கம் நோட்டீஸ்
x
ஜெய் பீம் திரைப்படத்தில் நடித்த நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா, இயக்குநர் ஞானவேலு உள்ளிட்டோரிடம் 5 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வன்னியர் சங்க மாநிலத் தலைவர் அருள்மொழி நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள நோட்டீஸில், ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமூகத்தினரை இழிவுபடுத்தும் வகையில் வேண்டுமென்றே சில காட்சிகள் வைக்கப்பட்டு இருப்பதாகவும், படத்தில் வன்னியர் சமூகத்தினர் தவறாக சித்தரிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக நடிகர் சூர்யா உள்ளிட்டோர், நாளிதழ் மற்றும் ஊடகங்கள் வாயிலாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், 24 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்டவர்கள் மன்னிப்பு கேட்காவிட்டால் அனைவர் மீதும் சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது. மேலும், நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா, இயக்குநர் ஞானவேலு உள்ளிட்டோர், 7 நாட்களுக்குள், வன்னியர் சங்கத்தினருக்கு 5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வன்னியர் சங்க மாநிலத் தலைவர் அனுப்பிய நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்