கொசஸ்தலை ஆறு வழிப்பாதையில் கட்டிட கழிவுகள் "2 வாரங்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும்" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கொசஸ்தலை ஆற்றின் நீர் வழிப்பாதையில் கொட்டப்பட்ட கட்டட கழிவுகளை இரண்டு வாரங்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொசஸ்தலை ஆறு வழிப்பாதையில் கட்டிட கழிவுகள் 2 வாரங்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
x
இது குறித்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு  அமர்வில்  விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நீர்வழிப்பாதையில் உள்ள கட்டட பொருள்களை அகற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், நீர்வழித்தடத்தில் அமைக்கப்பட்டிருந்த குழாய்களை அகற்ற  நான்கு வாரங்கள் கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இந்தக் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள்,  பணிகளை அக்டோபர் இறுதிக்குள் முடிக்கப்படுமென உறுதியளிக்கும்போது, அதற்கான தொழில்நுட்பங்களை நிறுவனங்கள் பெற்றுள்ளதா, இல்லையா என தெரியாதா எனக் கேள்வி எழுப்பினர். உரிய காலத்திற்குள் முடிக்காவிட்டால் மின்வாரிய தலைவர் ஆஜராக நேரிடும் என எச்சரித்தனர். மேலும், ஆற்றுப் படுகையில் இருந்து தீங்கு விளைவிக்கும் அனைத்து பொருட்களும் அகற்றப்பட்டதா என்பது குறித்து  சென்னை ஐஐடி நீர்வளப் பொறியியல் துறையின் உதவியைப் பெற்று ஆய்வு நடத்தவும் அறிவுறுத்தி  விசாரணையை வருகிற 26 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்