உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படி தண்ணீர் திறப்பு

உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படி தண்ணீர் திறப்பு அமைச்சர் துரைமுருகன் விளக்கம்.உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படி முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது என்று, தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.
உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படி தண்ணீர் திறப்பு
x
உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படி தண்ணீர் திறப்பு
 
உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படி தண்ணீர் திறப்பு அமைச்சர் துரைமுருகன் விளக்கம்.உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படி முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது என்று, தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார். எதிர்க்கட்சித் துணைத் தலைவர்  ஓ.பன்னீர்செல்வத்தின் கேள்விகளுக்கு, அவர் அளித்த பதில் அறிக்கையில்,  அணையின் உபரிநீர் போக்கியை திறக்கலாம் என்பது அணையை பராமரிக்கும் தமிழக நீர்வளத்துறை அலுவலர்களால் எடுக்கப்பட்ட முடிவு என்று கூறியுள்ளார்.உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படியே முல்லைப்பெரியாறில் இருந்து, அக்டோபர் 29-ம் தேதி தண்ணீர்  திறக்கப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளார்.நடைமுறை விதிகளின் படி கேரள அரசுக்கு முன்கூட்டியே அணை திறப்பு குறித்து தகவல் தரப்பட்டதாகவும், தமிழக அதிகாரிகள் அணையை திறந்தபோது,கேரள நீர்வளத்துறை அமைச்சரும், அம்மாநில அலுவலர்களும் அணையை பார்வையிட்டதாகவும் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.அணையின் நீர் மட்டம் வரும் 30 ஆம் தேதியன்று  142 அடியை எட்டும் என்றும் அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்