"நாளை இரவுக்குள் மேட்டூர் அணை நிரம்ப வாய்ப்பு" - "காவிரிக் கரையோரம் வெள்ளப் பெருக்கு ஏற்படலாம்"

"நாளை இரவுக்குள் மேட்டூர் அணை நிரம்ப வாய்ப்பு" - "காவிரிக் கரையோரம் வெள்ளப் பெருக்கு ஏற்படலாம்"
நாளை இரவுக்குள் மேட்டூர் அணை நிரம்ப வாய்ப்பு - காவிரிக் கரையோரம் வெள்ளப் பெருக்கு ஏற்படலாம்
x
"நாளை இரவுக்குள் மேட்டூர் அணை நிரம்ப வாய்ப்பு" - "காவிரிக் கரையோரம் வெள்ளப் பெருக்கு ஏற்படலாம்"

நாளை இரவுக்குள் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக சேலம் ஆட்சியர் கூறி உள்ளார்.காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மேட்டூர் அணையின் நீர் மட்டம் 118 அடியாக உள்ளது. இந்நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மேட்டூர் அணையின் வலது மற்றும் இடது கரையில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், நாளை இரவுக்குள் மேட்டூர் அணை, முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறினார். இதனால், காவிரிக் கரையோரம் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும், காவிரிக் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். காவிரி ஆற்றில் மக்கள் இறங்கக் கூடாது என்றும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்