"இல்லம் தேடி கல்வி" முதல்கட்டமாக 12 மாவட்டங்களில் அறிமுகம் - முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த முதலியார்குப்பத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
x
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த முதலியார்குப்பத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை போக்குவதற்கு நடப்பு கல்வியாண்டில் இல்லம் தேடி கல்வி என்ற புதிய திட்டத்திற்கு பட்ஜெட்டில் 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று அத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதலியார்குப்பத்தில் தொடங்கி வைத்தார். 

பள்ளிக்கல்வித்துறை  சார்பில் தொடங்கப்படும் இத்திட்டம் 1லட்சத்து 70 ஆயிரம் தன்னார்வலர்களைக் கொண்டு செயல்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக இன்று விழுப்புரம், மதுரை, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், ஈரோடு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நீலகிரி, கடலூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. பின்னர் மீதமுள்ள 26 மாவட்டங்களில் இந்த திட்டம் விரைவில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்