சாலை விபத்தில் தம்பதி உயிரிழப்பு - பெற்றோரை இழந்து 2 பெண் குழந்தைகள் தவிப்பு
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே சாலை விபத்தில் தம்பதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே சாலை விபத்தில் தம்பதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. முத்துவாஞ்சேரி சேர்ந்த மோகன்தாஸ், சுபலட்சுமி தம்பதியினர், மளிகை பொருட்கள் வாங்குவதற்காக அரியலூர் சென்றுள்ளனர். பின்னர், இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய இருவரும் முத்துவாஞ்சேரி அருகே சாலையின் நடுவே படுகாயங்களுடன் மயங்கிய நிலையில் இருக்க, அவ்வழியாக சென்றவர்கள் ஆம்புஸூக்கு தொடர்பு கொண்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், இருவரும் உயிரிழந்ததாக, மருத்துவர்கள் தெரிவிக்க பெற்றோரை இழந்த 2 பெண் குழந்தைகள் தவித்து வருகின்றனர். இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார், விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்
Next Story