இருவேறு இடங்களில் சிக்கிய போதை பொருட்கள் - 3 பேர் கைது - போலீசார் அதிரடி

ஒசூரில் போலீசார் அதிரடி வாகன சோதனையில் 13 லட்சம் மதிப்புள்ள குட்கா போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இருவேறு இடங்களில் சிக்கிய போதை பொருட்கள் - 3 பேர் கைது - போலீசார் அதிரடி
x
ஒசூரில் போலீசார் அதிரடி வாகன சோதனையில் 13 லட்சம் மதிப்புள்ள குட்கா போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கிருஷ்ண‌கிரி மாவட்டம் ஒசூர் மத்திகிரி காவல்துறையினர் கர்னூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஈச்சர் வாகனத்தை மடக்கி சோதனையிட்டபோது,  2 டன் அளவில் 12  லட்ச ரூபாய் மதிப்புடைய குட்கா பான்பராக் உள்ளிட்ட போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக லாரி ஓட்டுநர் தேவதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். இதேபோல, ஒசூர் சிப்காட் போலீசார் ஜூஜூவாடி பகுதியில் நடத்திய வாகன சோதனையில், காரில் கடத்தி வரப்பட்ட ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக முத்துவேல், குரு என இருவர் கைது செய்யப்பட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்