"பள்ளிகள் திறப்பு - தயார் நிலையில் இருக்க பள்ளிக்கல்வித் துறை ஆணையர் உத்தரவு

நவம்பர் 1-ம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகளைத் திறப்பதற்கு தயார்நிலையில் இருக்குமாறு, அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டு உள்ளார்.
பள்ளிகள் திறப்பு - தயார் நிலையில் இருக்க பள்ளிக்கல்வித் துறை ஆணையர் உத்தரவு
x
நவம்பர் 1-ம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகளைத் திறப்பதற்கு தயார்நிலையில் இருக்குமாறு, அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டு உள்ளார். தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்து இருந்தது. இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு அத்துறையின் ஆணையர் நந்தகுமார் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில், நவம்பர் 1-ஆம் தேதி பள்ளிகள் திறப்பதற்கு அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார் நவம்பர் 1-ஆம் தேதி பள்ளிகள் திறப்பதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று, அதனை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளார். மேலும், அங்கீகாரம் இல்லாமல் தனியார் பள்ளிகள் இயங்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ள பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார், அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில், நடப்பு கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்க கூடாது என்றும் கூறி உள்ளார்.


.




Next Story

மேலும் செய்திகள்