அர்ச்சகர்கள் நியமனம் - இடைக்கால தடை விதிக்க கோரிக்கை

கோயில் அர்ச்சகர்கள் நியமனங்களுக்கு இடைக்கால தடை விதிக்க உத்தரவு பிறப்பிக்க முடியாது என உயா்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
அர்ச்சகர்கள் நியமனம் - இடைக்கால தடை விதிக்க கோரிக்கை
x
கோயில் அர்ச்சகர்கள் நியமனங்களுக்கு இடைக்கால தடை விதிக்க கோரி, 

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கு,  தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுவில் அரசே அர்ச்சகர்களை நியமிப்பது சட்டவிரோதமானது என்றும் 

ஆகம விதிகளுக்கு உட்பட்டே பணி நியமனம் செய்யப்படவேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது. 

இந்நிலையில், தற்போதைய சூழலில் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கமுடியாது என தெரிவித்த நீதிபதிகள்,

அர்ச்சகர் பணிநியமனங்கள் உயர்நீதிமன்றத்தின் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது என்று உத்தரவிட்டுள்ளனர். 

மேலும், ஆகம விதிகளை மீறி நியமனங்கள் மேற்கொள்ள கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

வழக்கு தொடர்பாக தமிழக அரசு நான்கு வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஏழு வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்