வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி நிறுத்தம் - பொதுப்பணித்துறை அரசாணை வெளியீடு

தமிழகத்தில் இனி வெளிநாடுகளிலிருந்து மணல் இறக்குமதி செய்வதை நிறுத்தவும் ஏற்கனவே வாங்கிய மணலை 10 மாத காலத்திற்குள் விற்கவும் தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி நிறுத்தம் - பொதுப்பணித்துறை அரசாணை வெளியீடு
x
தமிழகத்தில் பல்வேறு துறைமுகங்களில் தேங்கியிருக்கும் மலேசிய மணலை விற்க ஒப்பந்த நிறுவனத்திற்கு கூடுதலாக 10 மாத கால அவகாசம் தரப்பட்டுள்ளது. மூன்றாண்டுகளுக்கு முன்பு வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்ய தமிழக அரசு  முடிவு எடுத்திருந்தது. இந்த முடிவை மாற்றும் வகையிலும், மணல் தேவையை போக்க தமிழகத்திலேயே கூடுதல் மணல் குவாரிகளை திறக்கவும் பொதுப்பணித்துறை திட்டமிட்டிருக்கிறது. இந்நிலையில், எண்ணூர் காமராஜர் துறைமுகம், காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் மற்றும் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் மலேசிய மணல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இருப்பில் வைக்கப்பட்டுள்ள மணலை 10 மாதத்திற்குள் விற்கவும் இனிமேல் வெளிநாடுகளிலிருந்து மணல் இறக்குமதி செய்வதை நிறுத்தவும், பொதுப்பணித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்