ஊரடங்கு - முதல்வர் இன்று ஆலோசனை

கொரோனா ஊரடங்கில் கூடுதல் தளர்வு வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலேசானை நடத்த உள்ளார்.
x
கொரோனா ஊரடங்கில் கூடுதல் தளர்வு வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலேசானை நடத்த உள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் நண்பகல்12.30 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. ஆலோசனைக்கூட்டத்தில் சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்கிறார்கள். அப்போது, உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகு ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 2-வது வாரத்தில் பள்ளிகள் திறப்பது, வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களில் விதிக்கப்பட்ட தடை நீக்குவது உள்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின், பள்ளிகள் திறப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை அல்லது நாளை வெளியாக வாய்ப்புள்ளது.


Next Story

மேலும் செய்திகள்