868 வழக்குகள் வாபஸ் - முதல்வர் உத்தரவு

முந்தைய ஆட்சியில் அறவழியில் போராடிய மக்கள் மீது தொடரப்பட்ட 868 வழக்குகளை திரும்ப பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
868 வழக்குகள் வாபஸ் - முதல்வர் உத்தரவு
x
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கடந்த 13ஆம் தேதி சட்டப்பேரவையில் நடைபெற்ற காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்த போது, இது தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டதை குறிப்பிட்டுள்ளார். அந்த அறிவிப்பினையும் செயல்படுத்தும் வகையில், நீட் தேர்வுக்கு எதிராக அறவழியில் போராடியவர்கள் மீது பதியப்பட்ட 446 வழக்குகளும், டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகப் போராடியவர்கள் மீது பதியப்பட்ட 422 வழக்குகளும், ஆக மொத்தம் 868 வழக்குகள் திரும்பப் பெறப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன் மீதான அனைத்து மேல்நடவடிக்கைகளை கைவிடவும், அவர் ஆணையிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்