பொறியியல் பட்டப் படிப்பு - 20 ஆண்டுகளாக தேர்ச்சி பெறாத மாணவர்கள் தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு
பதிவு : செப்டம்பர் 24, 2021, 07:20 PM
பொறியியல் படிப்பில் 20 ஆண்டுகளாக தேர்ச்சி பெறாத மாணவர்கள், நவம்பர் - டிசம்பரில் தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்பில் 20 ஆண்டுகளாக தேர்ச்சி பெறாத மாணவர்கள், நவம்பர் - டிசம்பரில் தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அண்ணா பல்கலைக் கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2001 - 2002ஆம் கல்வி ஆண்டில் சேர்ந்த மாணவர்களில் 3வது பருவம் முதலும், 2002 - 2003ஆம் ஆண்டில் முதல் பருவத்தில் சேர்ந்த மாணவர்களும், தேர்ச்சி பெறாத பாடங்களுக்கு தேர்வு எழுத, சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், 20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்கள் வரும் நவம்பர் - டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வில் பங்கேற்று தேர்வு எழுத, வரும் அக்டோபர் 4ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் வழக்கமான தேர்வு கட்டணத்துடன் கூடுதலாக 5 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும், தேர்வு அட்டவணை, தேர்வு முறை, மையம் ஆகியவை அக்டோபர் மாத இறுதியில் அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்

இருவேறு இடங்களில் சிக்கிய போதை பொருட்கள் - 3 பேர் கைது - போலீசார் அதிரடி

ஒசூரில் போலீசார் அதிரடி வாகன சோதனையில் 13 லட்சம் மதிப்புள்ள குட்கா போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

16 views

இடிந்து விழுந்த பள்ளத்தாக்கு மேம்பாலம் - வீடியோ காட்சிகள் வெளியீடு

போலந்தில் பள்ளத்தாக்கு மேம்பாலம் ஒன்று இடிந்து விழும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

13 views

ஸ்டோன் நண்டு உண்ணும் போட்டி - குறைந்த நேரத்தில் சாப்பிட்டு வென்ற நபர்

ஃப்ளோரிடாவில் ஸ்டோன் நண்டு அறுவடை சீசன் தொடங்கியது. அதை சிறப்பிக்கும் விதமாக ஸ்டோன் நண்டு நண்டு உண்ணும் போட்டி நடைபெற்றது.

7 views

பிற செய்திகள்

ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை முயற்சி - அலாரம் அடித்ததால் கொள்ளையன் தப்பியோட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது.

5 views

நகைகளை உருக்குவது தொடர்பான வழக்கு - சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

தமிழக கோவில்களுக்கு அறங்காவர்கள் நியமிக்கும் வரை, நகைகளை உருக்குவது தொடர்பாக முடிவெடுக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

14 views

போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி துரைமுருகன்; உடலில் இருந்த தோட்டாக்கள் எங்கே? - தேடுதல் பணியில் ஈடுபட்டு வரும் போலீசார்

தூத்துக்குடியில் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி துரைமுருகனின் உடலில் இருந்த தோட்டாக்கள் எங்கே? என போலீசார் தேடி வருகின்றனர்.

7 views

மூதாட்டி சேலையில் மளமளவென பற்றிய தீயை அணைத்த காவலர் - வைரல் வீடியோ

கோவிலில் மூதாட்டி ஒருவரின் உடையில் பற்றிய தீயை போக்குவரத்து காவலர் அணைக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

10 views

ரூ.102.94 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட கட்டடங்கள் - திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்கல்வித்துறை கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

5 views

ராம்குமார் மரணம் தொடர்பான வழக்கு - பிரேத பரிசோதனை செய்த மருத்துவரிடம் விசாரணை

சுவாதி வழக்கில் ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவரிடம் மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தியது.

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.