"நீதிமன்றம் ஒரு கோவிலை போன்றது " - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து

நீதிமன்றம் ஒரு கோவிலை போன்றது என்றும் இதனால் நியாயமாக நடக்க வேண்டும் என, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.
நீதிமன்றம் ஒரு கோவிலை போன்றது  - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து
x
சிறையில் உள்ள முருகன் என்பவர் ஜாமின் கோரிய வழக்கு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் வழக்கறிஞர் இந்த வழக்கை விசாரிக்கும் காவல் ஆய்வாளர்,  காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் ICU பிரிவில் உள்ளதாக, ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் தவறான தகவல் கொடுத்ததாகவும், இதனால் மனுதாரரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறினார். இதை தொடர்ந்து  நீதிபதி, நீதிமன்றம்  ஒரு கோவிலை போன்றது என்றும், நீதிமன்றத்திற்கு நியாயமாக நடக்க வேண்டும் என கருத்த கூறினார். நடந்த உண்மையை சொல்ல வேண்டும் என்றும், அப்போது தான் வாதிடும்  வழக்கறிஞருக்கு தைரியம் கிடைக்கும் என்றும் தெரிவித்தார். வழக்கறிஞர்கள் வழங்கும் உண்மையான ஆவணங்களின் அடிப்படையில் நீதிமன்றம் தெளிவான நியாயமான தீர்ப்பு வழங்க முடியும் என நீதிபதி குறிப்பிட்டார். நீதிமன்றத்திற்கு தவறான தகவல் கொடுத்த பரளச்சி காவல் நிலைய அதிகாரி உண்மை தகவல்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 24 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.



Next Story

மேலும் செய்திகள்