ஸ்மார்ட் சிட்டி பணியாளர் உயிரிழப்பு - கண்டெய்னர் பெட்டி தலையில் விழுந்து பலி

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி பணியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் கண்டெய்னர் பெட்டி தலையில் விழுந்து ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
ஸ்மார்ட் சிட்டி பணியாளர் உயிரிழப்பு - கண்டெய்னர் பெட்டி தலையில் விழுந்து பலி
x
தூத்துக்குடி மாநகராட்சி ஜெயராஜ் சாலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பணியின் போது  காமாட்சி நாதன், மற்றும் ஜோயல், ஆகியோர்  சாலையின் கட்டிட வேலை பொருட்கள் வைத்திருந்த கண்டெய்னர் பெட்டியை கிரேன் உதவியுடன் நகர்த்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கிரேனை சய்யது அலி பாத்ஷா என்பவர் இயக்கினார். இந்நிலையில் கிரேனை முன்னிருந்து பின்னோக்கி நகர்த்தும் போது பளுதூக்கி எதிர்பாராத விதமாக மேலே சென்ற உயரழுத்த மின் கம்பி மீது உரசியது. இதில் பயங்கர தீப்பொறியுடன் மின்சாரம், கண்டெய்னர் பெட்டிக்கு பாய்ந்தது. இதனால் பதற்றமடைந்த கிரேன் ஓட்டுனர் கண்டெய்னர் பெட்டியை தன் பிடியில் இருந்து விடுவித்துள்ளார். அப்போது கண்டெயன்ர் பெட்டி நேராக காமாட்சி நாதன் தலையில் விழுந்து  அவர் தலை நசுங்கி  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் படுகாயமடைந்த ஜோயலை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.Next Story

மேலும் செய்திகள்