3 மாத குழந்தை விற்பனை - பெற்றோர் உள்பட 5 பேரை கைது செய்தது போலீஸ்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் மூன்று மாத பெண் குழந்தையை விற்பனை செய்த தாய், தந்தை உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
x
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் மூன்று மாத பெண் குழந்தையை விற்பனை செய்த தாய், தந்தை உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். வடவீக்கம் கிராமத்தை சேர்ந்த சரவணன்-மீனா தம்பதிக்கு 4-வது முறையாக பெண் குழந்தை பிறந்துள்ளது. மூன்று மாதங்களேயான அந்த பெண் குழந்தையை 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு கோவையை சேர்ந்த தம்பதிக்கு பெற்றோர் விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்த போலீசார் சரவணன்-மீனா தம்பதியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். கோவையைச் சேர்ந்த தம்பதிக்கு குழந்தையை விற்பனை செய்ததை பெற்றோர் ஒப்புக் கொண்டுள்ளனர். இதையடுத்து தாய், தந்தை, இடைத்தரர்கள் உள்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவையில் இருந்து மீட்கப்பட்ட மூன்று மாத பெண் குழந்தை காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்