இடி, மின்னலுடன் பெய்த கனமழை - விமான போக்குவரத்து கடும் பாதிப்பு

பலத்த மழை காரணமாக சென்னை வந்த சர்வதேச விமானங்கள் பெங்களூரு திருப்பி விடப்பட்டன.
x
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் இன்று அதிகாலை வரை பெய்த பலத்த மழையால், விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இன்று அதிகாலை தோகா மற்றும் துபாயில் இருந்து இருந்து சென்னை வந்த 3 விமானங்கள் பலத்த மழை காரணமாக தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டன. இதேபோல் சென்னையில் இருந்து சிங்கப்பூா், குவைத், கொழும்பு உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல வேண்டிய 9 பன்னாட்டு விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் விமான பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

Next Story

மேலும் செய்திகள்