ஒகேனக்கல்லில் சரிந்த நீர் வரத்து - 9 ஆயிரம் கன அடியாக சரிவு

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் ஆற்றில் தமிழகத்திற்கு வரும் நீரின் அளவு 9 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது.
ஒகேனக்கல்லில் சரிந்த நீர் வரத்து - 9 ஆயிரம் கன அடியாக சரிவு
x
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் ஆற்றில் தமிழகத்திற்கு வரும் நீரின் அளவு 9 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது. கடந்த வாரம் கர்நாடகாவில் இருந்து காவிரி ஆற்றில் 22 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. இதனால் ஒகேனக்கல் - பிலிகுண்டு பகுதிக்கு நீர்வரத்து அதிகரித்தது.  இந்நிலையில், ஒகேனக்கல்லுக்கு 14 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருந்த நீர் வரத்து, திடீரென குறைந்து 9 ஆயிரம் கன அடி நீர் மட்டுமே வருகிறது. ஒகேனக்கல் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதாலும், கர்நாடக அணைகளிலிருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டதாலும், நீரின் அளவு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

 

Next Story

மேலும் செய்திகள்