நீட் தேர்வு - "கடைசி நேரத்தில் மாற்றங்கள் செய்தது ஏன்?"

நீட் தேர்வு - "கடைசி நேரத்தில் மாற்றங்கள் செய்தது ஏன்?"
நீட் தேர்வு - கடைசி நேரத்தில் மாற்றங்கள் செய்தது ஏன்?
x
நீட் தேர்வு - "கடைசி நேரத்தில் மாற்றங்கள் செய்தது ஏன்?"

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டத்தில் கடைசி நேரத்தில் மாற்றங்கள் செய்தது ஏன் என்று விளக்கமளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக, முதுநிலை மருத்துவ படிப்பை முடித்த 41 மருத்துவர்கள் தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.கடைசி நேரத்தில் இப்படியான மாற்றங்கள் மேற்கொண்டது பல தரப்பினரையும் பாதிக்கும் என்று மனுதாரர் சார்பில் வாதிடப்பட்டது.வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு, தேசிய தேர்வுகள் ஆணையம் மற்றும் தேசிய மருத்துவ ஆணையம் ஆகியவை பதில் அளிக்க உத்தரவிட்டு,விசாரணையை செப்டம்பர் 27ம் தேதிக்கு தள்ளி வைத்ததனர்.


Next Story

மேலும் செய்திகள்