தமிழகத்தில் கடல் பாசி பூங்கா அமைப்பு... - மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அறிவிப்பு

தமிழகத்தில் கடல் பாசி பூங்கா அமைப்பு... - மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அறிவிப்பு
x
தமிழகத்தில் கடல் பாசி பூங்கா அமைப்பு... - மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அறிவிப்பு

நாட்டிலேயே  முதன்முறையாக தமிழகத்தில் அமைக்கப்படும் கடல்பாசி பூங்கா பணிகள் விரைவில் தொடங்கும் என்று மத்திய மீன்வளத்துறை இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் மத்திய  இணையமைச்சர் எல். முருகன் மீனவ மக்களுடன்  கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார். அப்போது  பல மீனவ கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து  மனுக்களை அளித்தனர்.அதானி துறைமுகம் விரிவாக்க திட்டத்தை கைவிட வேண்டும், பழவேற்காடு பகுதியில்  மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அமைச்சரிடம் மீனவ மக்கள் முன்வைத்தனர். பின்னர் பேசிய மத்திய இணையமைச்சர் எல் முருகன், பழவேற்காடு மீன்பிடி துறைமுகம் அமைப்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்று  தெரிவித்தார். தமிழகத்தில் கடல்பாசி பூங்கா அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்