வானதி சீனிவாசன் மகன் சென்ற காரில் விபத்து

பாஜக சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசனின் மகன் சென்ற கார் விபத்திற்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.
x
வானதி சீனிவாசனின் மகன் ஆதர்ஸ் சென்னைக்கு காரில் சென்றார். சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி வழியாக கார் வந்து கொண்டிருந்த போது மேம்பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதியதில் தலைக்கீழாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரானது சிறிது தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டதில் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. தகவலறிந்து அங்கு விரைந்த அன்னதானப்பட்டி போலீசார் விபத்தில் சிக்கிய ஆதர்ஸை காயமின்றி மீட்டனர்.  உடனடியாக அங்கு  வந்த பாஜக நிர்வாகிகள் ஆதர்ஸை வேறொரு காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். விபத்தால் கொண்டலாம்பட்டி  சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்