இந்து சமய அறநிலைய சட்ட திருத்த மசோதா - மசோதாவை தாக்கல் செய்தார் அமைச்சர் சேகர்பாபு

இந்து சமய அறநிலைய சட்ட திருத்த மசோதா - மசோதாவை தாக்கல் செய்தார் அமைச்சர் சேகர்பாபு
x
இந்து சமய அறநிலைய சட்ட திருத்த மசோதா - மசோதாவை தாக்கல் செய்தார் அமைச்சர் சேகர்பாபு 

கோவில் நிலங்களை ஆக்கிரமித்தால் கைது செய்ய வழிவகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தாக்கல் செய்துள்ளார்.தமிழகத்தில் உள்ள கோவில்கள் மற்றும் அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், நிலங்களும் மீட்கப்பட்டு வருகின்றன. இதுமட்டுமின்றி, கோவில் நிலங்களைஆக்கிரமித்தால் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவில் நிலங்களை ஆக்கிரமித்தால் கைது செய்யும் சட்டத்திருத்த மசோதாவை சட்டமன்றத்தில் அமைச்சர் சேகர்பாபு தாக்கல் செய்தார். 1959ம் ஆண்டு கொண்டுவரபட்ட 79 b இந்து சமயம் மற்றும் அறநிலையத் சட்டத்தை திருத்தி, இந்து சமய நிலங்களை ஆக்கிரமிப்பவர் கடுமையான குற்றம் செய்தவராகக் கருதப்படுவார் என கொண்டுவரப்பட உள்ளது. இந்த சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்டால் ஜாமீன் மறுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்