பொறியியல் படிப்பிற்கான ரேங்க் பட்டியல்: தவறுதலாக முன் கூட்டியே வெளியானது - இணையதள பக்கத்திலிருந்து நீக்கம்

பொறியியல் படிப்பிற்கான ரேங்க் பட்டியல் தவறுதலாக முன்கூட்டியே வெளியானதையடுத்து, மீண்டும் ரேங்க்பட்டியல் இணையதள பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது.
பொறியியல் படிப்பிற்கான ரேங்க் பட்டியல்: தவறுதலாக முன் கூட்டியே வெளியானது - இணையதள பக்கத்திலிருந்து நீக்கம்
x
பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டதை தொடர்ந்து  வருகிற 14 -ஆம் தேதி பொறியியல் படிப்புக்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்படும் என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் பிற்பகல் 2 மணி அளவில் பொறியியல் படிப்பிற்கான ரேங்க் பட்டியல் முன் கூட்டியே இணையதளத்தில் வெளியானது. வெளியான சிறிது நேரத்திலேயே ஆயிரக்கணக்கான மாணவர்கள் பொறியியல் படிப்பிற்கான தங்களுடைய ரேங்க் பட்டியலை பதிவிறக்கம் செய்தனர். பொறியியல் படிப்பிற்கான ரேங்க் பட்டியல் வரும் 14 - ஆம் தேதி வெளியாகவிருந்த நிலையில் தவறுதலாக வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் இணையதள பக்கத்திலிருந்து ரேங்க் பட்டியலை தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் நீக்கியது.


Next Story

மேலும் செய்திகள்