மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்த தம்பதி.. செய்தி எதிரொலியால் ஆட்சியர் நடவடிக்கை. .வி.ஏ.ஓ சஸ்பெண்ட்

மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்த தம்பதி.. செய்தி எதிரொலியால் ஆட்சியர் நடவடிக்கை. .வி.ஏ.ஓ சஸ்பெண்ட்
x
மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்த தம்பதி.. செய்தி எதிரொலியால் ஆட்சியர் நடவடிக்கை. .வி.ஏ.ஓ சஸ்பெண்ட் 

தந்தி டிவி செய்தி எதிரொலியால், மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க காத்திருந்த தம்பதிக்கு, தேவையான உதவிகள் வழங்க வேலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.வேலூர் காஸ்பா சுடுகாடு பகுதியில், முருகன் பச்சையம்மாள் தம்பதியர் தவித்து வந்துள்ளனர்.தங்களுக்கு வீடு வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க நேற்று மாலை வந்துள்ளனர்.ஆட்சியரை சந்திக்க முடியாததால், ஆட்சியர் அலுவலகம் முன்பு, கைக்குழந்தைகளுடன் சாலையோரம், படுத்துறங்கினர். இந்த துயர நிலை குறித்து தந்தி டிவியில் இன்று செய்தி வெளியானது. செய்தி வெளியான ஒரு மணி நேரத்தில், மனு அளிக்க வந்து, காத்திருந்த குடும்பத்தாருக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும் என்று  மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.இதனிடையே, பணியை சரியாக செய்யாத சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரை பணி இடைநீக்கம் செய்து, ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்