வாகனங்களில் சட்டவிரோத ஸ்டிக்கர்கள் - தலைவர்களின் புகைப்படத்தை அகற்ற உத்தரவு

வாகனங்களில் சட்டவிரோத ஸ்டிக்கர்கள் - தலைவர்களின் புகைப்படத்தை அகற்ற உத்தரவு
வாகனங்களில் சட்டவிரோத ஸ்டிக்கர்கள் - தலைவர்களின் புகைப்படத்தை அகற்ற உத்தரவு
x
வாகனங்களில் சட்டவிரோத ஸ்டிக்கர்கள் - தலைவர்களின் புகைப்படத்தை அகற்ற உத்தரவு 

வாகனங்களில் வெளிப்புறத்தில் தெரியும்படி ஒட்டப்பட்டிருக்கும் தலைவர்கள் அல்லது பிற புகைப்படங்களை 60 நாட்களில் அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.வாகனங்களில் வழக்கறிஞர்கள் என ஒட்டப்படும் ஸ்டிக்கர்களை சிலர் சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்துவதாக பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு மீதான விசாரணைகள் முடிந்த நிலையில் இன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், வாகனங்களில் கட்சிக்கொடிகள், தலைவர்களின் புகைப்படங்கள் வெளிப்புறத்தில் தெரிவதுபோல் பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறிய நீதிபதிகள்,அரசியல் கட்சியினர் தங்களது தலைவரின் புகைப்படங்களை தேர்தல் நேரத்தில் மட்டும் பயன்படுத்தலாமே தவிர பிற நேரங்களில் பயன்படுத்த கூடாது என தெரிவித்தனர்.மேலும், உரிமம் புதுப்பித்தல் உள்ளிட்ட விதிமுறைகளை முறையாக பின்பற்றாத வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும்.வாகனத்தின் தடை செய்யப்பட்ட கண்ணாடிகள், நிறம் ஊட்டப்பட்ட கண்ணாடிகள் இருந்தால் அதனை அகற்ற வேண்டும்.வாகனத்தின் வெளிப்புறத்தில் தெரியும்படி தலைவர்களின் புகைப்படங்கள் அல்லது வேறு ஏதேனும் படங்கள் ஒட்டப்பட்டிருந்தால் அதனை நீக்க வேண்டும் எனவும் இதனை 60 நாட்களில் நடைமுறைபடுத்த வேண்டும் என்று டிஜிபி மற்றும் உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்