கொரோனா கட்டுப்பாடுகளால் கோயம்பேடு சந்தையில் வியாபாரம் சரிவு

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் மக்களிடையே நிலவும் குறைவான பணப்புழக்கத்தால், விற்பனை மந்தமாக நடைபெறுவதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்
x
கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் மற்றும் மக்களிடையே நிலவும் குறைவான பணப்புழக்கத்தால், தொடர்ந்து 2வது ஆண்டாக விற்பனை மந்தமாக நடைபெறுவதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் வியாபாரம் மந்த நிலையிலேயே காணப்படுகிறது. கொரோனோ பாதிப்பால் தொடர்ந்து 2வது ஆண்டாக விநாயகர் சதுர்த்தி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கத்தை விட விற்பனை 20 சதவீதமாக சரிவைக் கண்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர். மேலும், காய்கறிகள் வழக்கமான விலையை விட 10முதல் 20 ரூபாய் வரை குறைவாக விற்கப்படுகின்றன. அதே போல், பழச் சந்தையிலும் விற்பனை வெகுவாக சரிந்துள்ளது. பண்டிகைக் காலம் என்பதால் மலர்களின் விலை வழக்கம் போலவே தேவையின் அடிப்படையில் உயர்ந்தாலும்,  விழா கட்டுப்பாடுகளால், மலர் விற்பனையும் தொடர்ந்து குறைந்துள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.
ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட வாழ்வாதார பாதிப்பால், பொது மக்களிடையே பணப்புழக்கம் குறைந்துள்ள நிலையில், பண்டிகையை பொதுமக்கள் யாரும் விமரிசையாகக் கொண்டாடவில்லை என்று வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்