இறக்குமதி வாகன நுழைவு வரி குறித்த வழக்கு: உரிமையாளர்களுக்கு எதிரான பிடிவாரண்ட் உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம்

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களுக்கு நுழைவு வரி செலுத்தப்பட்டதையடுத்து, தனியார் நிறுவன உரிமையாளர்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இறக்குமதி வாகன நுழைவு வரி குறித்த வழக்கு: உரிமையாளர்களுக்கு எதிரான பிடிவாரண்ட் உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம்
x
இது குறித்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இறக்குமதி செய்யபட்ட வாகனங்களுக்கு நுழைவு வரி செலுத்தி விட்டதாக தெரிவிக்கபட்டதையடுத்து, 2 தனியார் நிறுவன உரிமையாளர்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிபதி, இரு தனியார் நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்கை முடித்து வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்