கொடநாடு வழக்கு - தனிப்படை விசாரணை

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரணை நடத்த அமைக்கப்பட்ட தனிப்படை புலனாய்வு விசாரணைக்குழு, எஸ்டேட் முன்னாள் மேலாளர் நடராஜனிடம் விசாரணை நடத்தியது.
கொடநாடு வழக்கு - தனிப்படை விசாரணை
x
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே கொடநாடு எஸ்டேட் முன்னாள் மேலாளர் நடராஜன், கோத்தகிரி மின்வாரிய உதவி பொறியாளர், தடயவியல் நிபுணர் உள்ளிட்டோர் ஆஜராக உத்தரவிடப்பட்டது. ஆனால் அவர்கள் 3 பேரும் நேற்று நடந்த விசாரணைக்கு ஆஜராகவில்லை. 
இதனிடையே கொடநாடு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த கூடுதல் எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. 
கொடநாடு வழக்கின் முதல் தகவல் அறிக்கை மற்றும் ஆவணங்கள் 
சரிபார்க்கப்பட்டது. இதையடுத்து வழக்கு தொடர்பான விசாரணைக்காக கொடநாடு எஸ்டேட் முன்னாள் மேலாளர் நடராஜன் விசாரணைக்கு நேரில் ஆஜரானார். ஊட்டி பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆஜரான அவரிடம்  ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி, எஸ்.பி. ஆசிஷ் ராவத் மற்றும் ஐஜி சுதாகர் ஆகியோர் விசாரணை நடத்தினர். இதனிடையே கொடநாடு விவகாரம் தொடர்பாக விசாரணையை விரைவுபடுத்தும் வகையில் மேலும் 4 தனிப்படைகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன. Next Story

மேலும் செய்திகள்