தனியார் பள்ளிக்கு நிகரான அரசு பள்ளி - விரும்பி வந்து மாணவர்களை சேர்க்கும் பெற்றோர்

தனியார் பள்ளியிலிருந்து மாணவர்களை ஈர்க்கும் ஒரு அரசு பள்ளி பற்றி தற்போது பார்க்கலாம்..
x
சுவர் முழுவதும் மாணவர்களை கவரும் வண்ண ஓவியங்கள்... ஸ்மார்ட் கிளாஸ் வசதி.... என சகல வசதியுடன் காட்சியளிக்கும் வகுப்பறைகளை கொண்டது, நாமக்கல் மாவட்டம் பொத்தனூர் வெங்கமேட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. இந்த ஆண்டு மட்டும் கூடுதலாக 200 மாணவர்கள் இந்த பள்ளியில் சேர்ந்துள்ளனர். அதிலும் பெரும்பாலான மாணவர்கள் தனியார் பள்ளியில் இருந்து இங்கு சேர்ப்பட்டுள்ளனர்... கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளை தாண்டி, மாணவர்களின் தனித்திறமையை ஊக்குவிக்க பள்ளி சார்பில் எடுக்கப்படும் நடவடிக்கை தான் இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.ஓவியம், கராத்தே, யோகா, சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளும் இந்த பள்ளியில் அளிக்கப்படுவது கூடுதல் சிறப்பு...பெற்றோர்களின் முழுமையான ஒத்துழைப்பு.... தன்னார்வலர்களின் முழுமையான பங்களிப்பு.... என சிறப்பாக செயல்பட்டு வரும் இந்த பள்ளி சார்பில் தற்போது கூடுதல் வசதி வேண்டி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டு, ஆயிரம் மாணவர்கள் என்கிற அளவிற்கு தங்கள் பள்ளி தரம் உயரும் என நம்பிகை தெரிவிக்கிறார், பள்ளியின் தலைமை ஆசிரியை மாலதி. 


Next Story

மேலும் செய்திகள்