ஹெலிகாப்டர் பிரதர்ஸ் வழக்கு - நீதிபதி கேள்வி

பல கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹெலிகாப்டர் பிரதர்ஸ் எப்படி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
x
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஹெலிகாப்டர் பிரதர்ஸ் என அழைக்கப்படும் கணேசன், சுவாமிநாதன் ஆகிய இருவரும்  கும்பகோணத்தில்  நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.  இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரில்  அகிலாண்டம், வெங்கடேசன் ஆகியோர்  ஜாமின் வழங்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு செய்தனர்.இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,  பண மோசடி குறித்து 35க்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளதாக கூறினர். கைது செய்யப்பட்ட ஹெலிகாப்டர் பிரதர்ஸ் கணேசன், சுவாமிநாதன் ஆகியோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும்  தெரிவித்தார். வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் அகிலாண்டம், வெங்கடேசனுக்கு 
ஜாமின் வழங்க அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கபட்டது. அகிலாண்டத்திற்கு மூன்றரை வயதில் குழந்தை உள்ளதாகவும், வெங்கடேசனுக்கு வயது முதிர்வு காரணமாகவும் ஜாமின் வழங்க கோரி வாதிடப்பட்டது. இதனைதொடர்ந்து, கணேசன், சுவாமிநாதன் ஆகியோர் எப்படி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, பண மோசடி வழக்கு விசாரணை விவரம் மற்றும் ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் 8 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.



Next Story

மேலும் செய்திகள்