சிறப்பு பிரிவின் கீழ் தடுப்பூசி செலுத்தும் பணி - தமிழக சுகாதாரத் துறை தகவல்

தமிழகத்தில் சிறப்பு பிரிவின் கீழ் இதுவரை, எட்டரை லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரனோ தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
சிறப்பு பிரிவின் கீழ் தடுப்பூசி செலுத்தும் பணி - தமிழக சுகாதாரத் துறை தகவல்
x
தமிழகத்தில் சிறப்பு பிரிவின் கீழ் இதுவரை, எட்டரை லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரனோ தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக 
தமிழக சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், வீடற்றவர்கள் என சிறப்புப் பிரிவினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரப் படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில், இந்த சிறப்பு பிரிவின் கீழ் இதுவரை 8 லட்சத்து 57 ஆயிரம் பேருக்கு கொரோனோ தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு  3 லட்சத்து 93 ஆயிரத்து 439 டோஸ் தடுப்பூசிகளும், பாலூட்டும் தாய்மார்களுக்கு 2 லட்சத்து 99 ஆயிரத்து 934 டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன.வீடற்றவர்களுக்கு ஆயிரத்து 992 டோஸ்களும்,மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆயிரத்து 746 டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.இதைத் தவிர, குழந்தைகளுக்கான நியுமோ - கோக்கல் தடுப்பூசியை பொறுத்தமட்டில், 55 ஆயிரத்து 331 குழந்தைகளுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 
Next Story

மேலும் செய்திகள்