"அதிமுக ஆட்சியில் கூடுதல் விலைக்கு பிபிஇ கிட்" - அமைச்சர் மா.சுப்ரமணியன் குற்றச்சாட்டு

கடந்த ஆட்சி காலத்தில் கொரோனோவிற்காக முகக்கவசம், பி.பி.கிட், என்.95 மாஸ்க் ஆகியவை கூடுதல் விலைக்கு வாங்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் சட்டப்பேரவையில் குற்றஞ்சாட்டியுள்ளார்.
x
தமிழக சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பதிலளித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், கடந்த ஆட்சிக்காலத்தில் மூன்றடுக்கு முகக்கவசம் ஒன்று 9 ரூபாய் 80 காசுகளுக்கு வாங்கப்பட்டதாக கூறினார்.   ஆனால் தற்போது அவை 85 காசுகள் முதல் ஒரு ரூபாய் 15 காசுகள் வரை வாங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.   இதன்மூலம் கடந்த 3 மாதத்தில் 6 கோடி ரூபாய் அரசுக்கு கூடுதல் செலவு குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  அதேபோல, என்.95 முகக்கவசம் 14 ரூபாய் 40 காசுகளுக்கு வாங்கப்பட்டதாகவும், ஆனால் தற்போது 6 ரூபாய் 95 காசுகளுக்கு வாங்குவதாகவும் இதன்மூலம் 2 கோடியே 32 லட்சம் ரூபாய் மிச்சப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர் மா. சுப்ரமணியன்,   பிபிஈ கிட் எனப்படும் பாதுகாப்பு கவச உடை 385 ரூபாய்க்கு கடந்த ஆட்சியில் வாங்கப்பட்டதாகவும், தற்போது 139 ரூபாய்க்கு வாங்குவதாகவும் குறிப்பிட்டார்.  இதன் மூலம் அரசுக்கு 33 கோடியே 36 லட்சம் கூடுதல் செலவு குறைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.  கடந்த 3 மாதங்களில் 42 கோடியே 18 லட்சம் கூடுதல் செலவு குறைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன்,   கடந்த ஆட்சியில் இதுபோன்ற கூடுதல் தொகைகள் எங்கு சென்றதோ எனத் தெரியவில்லை என தெரிவித்தார்.Next Story

மேலும் செய்திகள்