"நாட்டு மாடுகளை மட்டும் அனுமதிக்க வேண்டும்" - தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டு மாடுகளை மட்டும் அனுமதிக்க வேண்டும் - தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
x
ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு இன மாடுகளை மட்டும் அனுமதிக்க உத்தரவிட வேண்டும் எனவும், வெளிநாட்டு மற்றும் கலப்பின மாடுகள் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நாட்டு மாடுகளை பாதுகாக்கும் வகையில், 2017ஆம் ஆண்டு சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டதை மேற்கோள்காட்டினர்.

வெளிநாட்டு மாடுகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க தடையில்லை என்ற அரசுத்தரப்பு வாதத்தை நிராகரித்த நீதிபதிகள், 

ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்க வேண்டும் எனவும், வெளிநாட்டு மாடுகள், கலப்பின மாடுகளை பங்கேற்க அனுமதிக்க கூடாது எனவும் உத்தரவிட்டனர்.

மேலும், மாடுகளுக்கு செயற்கை கருத்தரித்தல் முறையை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தினர். 


Next Story

மேலும் செய்திகள்