"32 சுங்கச்சாவடிகளை அகற்ற நடவடிக்கை" - அமைச்சர் எ.வ.வேலு தகவல்

தமிழகத்தில் கூடுதலாக உள்ள 32 சுங்கச்சாவடிகளை அகற்ற மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
x
தமிழகத்தில் கூடுதலாக உள்ள 32 சுங்கச்சாவடிகளை அகற்ற மத்திய அரசிடம்  வலியுறுத்துவோம் என சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் சுங்கச்சாவடி கட்டண உயர்வு தொடர்பாக மனித நேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லா கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.  தமிழகத்தில் தற்போது 24 சுங்கச்சாவடிகளின் கட்டணம் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், சுங்கச்சாவடிகள் கந்துவட்டி போல ஏழை மக்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை தூரத்தை கணக்கிட்டால் 16 சுங்கச்சாவடிகள் தான் இருக்க வேண்டும் எனவும் ஆனால் தற்போது 48 சுங்கச்சாவடிகள் செயல்படுவதாக கூறினார்.  கூடுதலாக உள்ள 32 சுங்கச்சாவடிகளை அகற்றவும், சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை குறைக்கவும் மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்று, அமைச்சர் எ.வ.வேலு பேரவையில் உறுதியளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்