பம்பர் டூ பம்பர் காப்பீடு கட்டாயம் என்ற உத்தரவு நிறுத்திவைப்பு

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் புதிய வாகனங்களுக்கு 5 ஆண்டு பம்பர் டூ பம்பர் காப்பீடு கட்டாயம் என்ற உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது..
x
பம்பர் டூ பம்பர் காப்பீடு - நிறுத்திவைப்பு

பம்பர் டூ பம்பர் காப்பீடு கட்டாயம் என்ற உத்தரவு தற்காலிகமாக நிறுத்திவைப்பு

செப்.1 முதல் புதிய வாகனங்களுக்கு 5 ஆண்டு பம்பர் டூ பம்பர் காப்பீடு கட்டாயம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது

வாகன உரிமையாளர், ஓட்டுனர், பயணி என அனைவரையும் உள்ளடக்கும் வகையில் காப்பீடு செய்ய உத்தரவிடப்பட்டது

மென்பொருளில் உரிய மாற்றம் செய்ய 90 நாட்கள் அவகாசம் கோரி பொதுக் காப்பீட்டு மன்றம் சார்பில் மனு

இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் ஒப்புதல் இன்றி மாற்றம் செய்ய இயலாது என மனு

"ஆணையத்தின் ஒப்புதல் பெற்று மாற்றம் செய்ய 90 நாள் அவகாசம் தேவை"

பொதுக் காப்பீட்டு மன்றத்தின் கோரிக்கையை ஏற்று முந்தைய உத்தரவு நிறுத்திவைப்பு

வழக்கு விசாரணை வரும் 13ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு


Next Story

மேலும் செய்திகள்