கோடநாடு கொலை,கொள்ளை வழக்கு - மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணை

உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ள கோடநாடு கொள்ளை, கொலை வழக்கு விசாரணைக்கு சயான் மற்றும் வாளையாறு மனோஜை போலீஸார் ஆஜர்படுத்த உள்ளனர்.
கோடநாடு கொலை,கொள்ளை வழக்கு - மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணை
x
உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இன்று  விசாரணைக்கு வரவுள்ள கோடநாடு கொள்ளை, கொலை  வழக்கு விசாரணைக்கு சயான் மற்றும் வாளையாறு மனோஜை போலீஸார் ஆஜர்படுத்த உள்ளனர். கோடநாடு கொள்ளை, கொலை  வழக்கு தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு, அனைவரும் ஜாமீனில் உள்ளனர். வாளையாறு மனோஜூக்கு யாரும் உத்தரவாதம் அளிக்காததால் அவர் குன்னூர் கிளை சிறையில் உள்ளார். இந்த நிலையில் கோடநாடு வழக்கு உதகைள மாவட்ட நீதிமன்றத்தில் 
இன்று விசாரணைக்கு வரவுள்ளது. விசாரணைக்கு சயான் மற்றும் வாளையாறு மனோஜை போலீஸார் ஆஜர்படுத்த உள்ளனர். மேலும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா, இளவரசி, திவாகர், சஜீவன், முன்னாள் நீலகிரி மாவட்ட ஆட்சியர் சங்கர், முன்னாள் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா, கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜ், தடவியல் நிபுணர், கோத்தகிரி மின்வாரிய உதவி பொறியாளர் ஆகியோரிடம்  விசாரணை மேற்கொள்ள மனு தாக்கல் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்