பேருந்து உதிரி பாகங்கள் விற்பனை நிலையத்தில் திடீர் தீ - 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்த வீரர்கள்

கரூரில் பேருந்து கூண்டுகட்டும் உதிரி பாகங்கள் விற்பனை நிலையத்தில் திடீரென தீ பற்றி விபத்து ஏற்பட்டுள்ளது.
பேருந்து உதிரி பாகங்கள் விற்பனை நிலையத்தில் திடீர் தீ - 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்த வீரர்கள்
x
நள்ளிரவில் திடீரென புகை மூட்டத்துடன் தீ பற்றி எரியத் தொடங்கியது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர், தீயணைப்புத் துறையினருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த தீயணைப்பு படையினர் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். இதில் கடைக்குள் இருந்த சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. இந்நிலையில், இந்த விபத்து குறித்து கரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்