ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆறுதல் சொன்ன சசிகலா - கண்கலங்கிய ஓபிஎஸ்

ஓ. பன்னீர்செல்வம் மனைவியின் மரணத்தை தொடர்ந்து ஓ.பி.எஸ்ஸை நேரில் சந்தித்து சசிகலா ஆறுதல் கூறினார்.
ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆறுதல் சொன்ன சசிகலா - கண்கலங்கிய ஓபிஎஸ்
x
ஓ.பி.எஸ் மனைவி விஜயலட்சுமி உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானாார். அவரது உடல் வைக்கப்பட்டிருந்த சென்னை பெருங்குடி மருத்துவமனைக்கு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய காரில் சசிகலா வந்தார். அந்த காரில் அதிமுக கட்சி கொடி கட்டப்பட்டிருந்தது. ஓ.பி.எஸ்ஸின் மூத்த மகள் கவிதா, சசிகலாவை மருத்துவமனைக்கு மேலே அழைத்துச் சென்றார். அங்கு மனைவி மறைவை நினைத்து கண்கலங்கிய ஓபிஎஸ்ஸின் கைகளை பிடித்து சசிகலா ஆறுதல் கூறினார். 
ஓபிஎஸ் அருகே அமர்ந்து மனைவி விஜயலட்சுமி உயிரிழப்பு குறித்து சசிகலா கேட்டறிந்தார். சுமார் 20 நிமிடம் நடந்த இந்த சந்திப்பின் போது, ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், ஓபிஎஸ் மகள், முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். ஆறுதல் நிகழ்வுக்குப் பின் 7 நிமிடம் தனி சந்திப்பு நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்