மேம்பாலம் இடிந்து விழுந்த விவகாரம் : "வரும் சனி அன்று 2ம் கட்ட ஆய்வு" - என்ஐடி ஆய்வுக்குழு தகவல்

மதுரை மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக இரண்டாம் கட்ட ஆய்வு முடிந்த 10 நாட்களுக்கு பிறகு அறிக்கை சமர்பிக்கப்படும் என என்ஐடி ஆய்வுக்குழு பேராசிரியர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்
மேம்பாலம் இடிந்து விழுந்த விவகாரம் : வரும் சனி அன்று 2ம் கட்ட ஆய்வு - என்ஐடி ஆய்வுக்குழு தகவல்
x
மதுரை மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக 
இரண்டாம் கட்ட ஆய்வு முடிந்த 10 நாட்களுக்கு பிறகு அறிக்கை சமர்பிக்கப்படும் என என்ஐடி ஆய்வுக்குழு பேராசிரியர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார். கடந்த 28 ஆம் தேதி மதுரை புது நத்தம் சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விபத்துக்குள்ளானது. 
இது தொடர்பாக மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விபத்திற்கான காரணம் குறித்து திருச்சி என்.ஐ.டி பேராசிரியர் பாஸ்கர்,  நாரயரணபுரம் அருகே விபத்து நடந்த இடத்தில் நேரில் ஆய்வு செய்தார். இந்நிலையில், இரண்டாம் கட்ட ஆய்வு வரும் சனிக்கிழமை நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்