ரூ.26.80 கோடி இழப்பு? - அரசு பதிலளிக்க உத்தரவு

கடல்நீரை குடிநீராக்கும், தனியார் நிறுவன திட்ட ஒப்பந்த பதிவுக்கான கட்டணம் 26 கோடியே 80 லட்சம் ரூபாய்க்கு விலக்களித்த விவகாரத்தில், தமிழக அரசுக்கு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
சென்னை அடுத்த நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் 2-வது அலகு அமைக்க, ஸ்பெயின் மற்றும் ஐக்கிய அரேபிய நாட்டு நிறுவனங்களின் கூட்டு நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. 

ஆயிரத்து 259 கோடி ரூபாய் செலவில் அமையும் திட்டம் தொடர்பான கூட்டு நிறுவனங்களின் ஒப்பந்தத்தை பதிவு செய்ய, 26 கோடியே 80 லட்சம் ரூபாய்க்கு விலக்களித்து, கடந்த கடந்த அக்டோபரில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

இதை ரத்துச் செய்யக்கோரி சென்னை ரங்கநாதன், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பதிவுக் கட்டணம், திட்ட நிதியுடன் சேர்ந்ததல்ல என்பதால், கட்டண விலக்கு வழங்கியது சட்ட விரோதம் என சுட்டிக்காட்டினார். 

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு, மனுவுக்கு 4 வாரங்களில், தமிழக அரசும், வெளிநாட்டு நிறுவனங்களும் பதிலளிக்க உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்