"விபத்திற்கு முழுக்க முழுக்க ஒப்பந்ததாரரின் மெத்தனமே காரணம்" - அமைச்சர் ஏ. வ.வேலு

மதுரை நத்தம் சாலையில் மேம்பால பணியின் போது ஏற்பட்ட விபத்திற்கு ஒப்பந்ததாரரின் அலட்சியமே காரணம் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ. வ.வேலு குற்றம் சாட்டியுள்ளார்.
x
மதுரை நத்தம் சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. நேற்று மேம்பாலத்தின் 4வது தூணில் நின்று கொண்டுன் இரு தொழிலாளர்கள் பணிபுரிந்த போது மேம்பாலம் இடிந்து விழுந்தது. இதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இந்த நிலையில் விபத்து ஏற்பட்ட பகுதிக்கு நேரில் சென்ற அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், ஏ.வ.வேலு, மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் பேசிய ஏ.வ.வேலு,  ஹைட்ராலிக் எந்திரம் பழுது காரணமாக விபத்து ஏற்பட்டதாகவும், ஒப்பந்தகாரர் பாதுகாப்பற்ற முறையில் செயல்பட்டதாலும், அவரின் அலட்சியத்தாலும் இந்த விபத்து நிகழ்ந்ததாக குற்றம்சாட்டினார். மேலும் பணி நடைபெற்ற போது மேற்பார்வை பொறியாளர் இல்லை என்பதையும் அமைச்சர் சுட்டிக் காட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்