நல்ல நேரம் பொறந்தாச்சு - வடிவேலு

தனக்கு நல்ல காலம் பொறந்தாச்சு என நடிகர் வடிவேலு உருக்கமாகவும், நெகிழ்ச்சியாகவும், தெரிவித்துள்ளார்.
x
நல்ல நேரம் பொறந்தாச்சு - வடிவேலு
 

தனக்கு நல்ல காலம் பொறந்தாச்சு என நடிகர் வடிவேலு உருக்கமாகவும், நெகிழ்ச்சியாகவும், தெரிவித்துள்ளார்.தந்தி டிவிக்கு அவர் அளித்த பிரத்யேக தகவலில், மீண்டும் சினிமாவில் தாம் தோன்றப்போவது முதன் முதலில் வாய்ப்புத் தேடும் போது ஏற்பட்ட உணர்வை தருவதாக கூறியுள்ளார்.தனது ரசிகர்கள் ஒவ்வொரு வீட்டிலும் ரசிகர் மன்றம் வைத்துள்ளார்கள் என்றும், ஒவ்வொரு குடும்பமும் எனக்கு ரசிகர் மன்றம் தான் என்றும் வடிவேலு நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.தன் ரசிகர்களின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றியவர் லைக்கா நிறுவனத்தின் சுபாஷ்கரன் என்றும்,தன்னை மீண்டும் திரைக்கு கொண்டுவந்ததன்  மூலம் சுபாஷ்கரன் சபாஷ்கரன் ஆகிவிட்டார் என்று நடிகர் வடிவேலு குறிப்பிட்டார்.ஐந்து படங்களில் நடிக்க தன்னை சுபாஷ்கரன் ஒப்பந்தம் செய்துள்ளார் என்று தெரிவித்த வடிவேலு,இந்த சந்தோஷத்தில் தனக்கு 20 வயது குறைந்துவிட்டதாக குறிப்பிட்டார்.முதலமைச்சர் ஸ்டாலினை தாம் சந்தித்த பிறகு, தனக்கு நல்ல நேரம் தொடங்கி விட்டது என்றும்,மீண்டும் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவிக்க இருப்பதாகவும் வடிவேலு கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்